டெக்னிக்கல் அனாலிசிஸ் சற்று ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ் சற்று ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது
UPDATED : செப் 17, 2025 10:55 PM
ADDED : செப் 17, 2025 10:53 PM

நிப்டி
நா ளின் ஆரம்பத்தில், சிறியதொரு ஏற்றத்துடன் 25,276- புள்ளிகளில் துவங்கிய நிப்டி, தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து, 25,346 என்ற உச்சத்தை சந்தித்து, பின் 25,275 என்ற அளவுக்கு இறங்கி, அதன் பின்னால், நாளின் இறுதியில் 91 புள்ளிகள் ஏற்றத்துடன் 25,330 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):66.52 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):2.86 என இருப்பது, சற்றே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என்பதை போன்ற தோற்றத்தையே காட்டுகிறது.
![]() |
தற்போதைய சூழ்நிலையில் 25,315 என்ற நிலை மிக முக்கியமானதாக இருக்கும். இந்த நிலைக்கு கீழே சென்றால், சற்று இறங்குவதற்கான வாய்ப்புள்ளது. தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின் படி, நிப்டி 25,290, 25,245 மற்றும் 25,220 என்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும், 25,350, 25,390 மற்றும் 25,415 என்ற எல்லைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.
![]() |
நிப்டி பேங்க்
வ ர்த்தகத்தின் துவக்கத்தில் சிறியதொரு ஏற்றத்துடன் 55,158- புள்ளிகளில் ஆரம்பித்த நிப்டி பேங்க், பின் 55,146 என்ற குறைந்தபட்ச அளவை அடைந்து, அதைத் தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து, 55,540 என்ற அதிகபட்ச நிலையை அடைந்து, நாளின் இறுதியில் 345 புள்ளிகள் ஏற்றத்துடன், 55,493 புள்ளிகளில்- நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):187.52, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 59.78. மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 2.76 என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலைமையில் ஏற்றம் தொடர்வதற்கு 55,395 என்ற அளவுக்கு கீழே போகாமல் வர்த்தகம் நடக்க வேண்டும். 55,245, 54,995, மற்றும் 54,845 போன்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும்; 55,640, 55,785 மற்றும் 55,940 என்ற நிலைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும், நிப்டி பேங்க் செயல்பட வாய்ப்புள்ளது.


