ADDED : செப் 16, 2025 12:35 AM

  நிப்டி 
நாளின் ஆரம்பத்தில் சிறியதொரு ஏற்றத்துடன் 25,118 புள்ளிகளி-ல் துவங்கிய நிப்டி, சிறிது நேரத்திலேயே இறங்க ஆரம்பித்து, பின் 25,138 என்ற நிலையை சந்தித்து இறங்கி, பின்னர் ஏற்றத்தை சந்திக்காமலேயே 25,048 என்ற குறைந்தபட்ச அளவை அடைந்து, நாளின்  இறுதியில் 44 புள்ளிகள் இறக்கத்துடன் 25,069ல் நிறைவடைந்தது.
நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):50.99 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):2.32 என இருப்பது செல்லும் திசை தெரியாமல் குறுகிய ஏற்ற இறக்கங்களுடன் போவதற்கான வாய்ப்பு உருவாவது போன்ற தோற்றம் தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில் 25,085 என்ற நிலை மிக முக்கியமானதாக இருக்கும். நாளின் இறுதியில் இந்த நிலைக்கு மேலே நிறைவடையாவிட்டால், நல்லதொரு இறக்கம் வருவதற்கான வாய்ப்பு உருவாகும். தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின் படி, நிப்டி 25,032, 24,996 மற்றும் 24,962 என்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும், 25,122, 25,175 மற்றும் 25,209 என்ற எல்லைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.
நிப்டி பேங்க் 
வர்த்தக ஆரம்பத்தில் சிறியதொரு ஏற்றத்துடன் 54,884- புள்ளிகளில் ஆரம்பித்த நிப்டி பேங்க், அதன் பின்னர் ஏற்றத்தை சந்தித்து, 55,018 என்ற அதிகபட்ச அளவை அடைந்து, அடுத்து திடீரென இறங்கி, 54,807 என்ற குறைந்தபட்ச அளவை தொட்டுவிட்டு, நாளின் இறுதியில் 78 புள்ளிகள் ஏற்றத்துடன் 54,887-ல் நிறைவடைந்தது.
எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):128.13, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 50.95. மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 1.98 என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலைமையில் ஏற்றம் உருவாக 54,905 என்ற அளவுக்கு மேலே சென்று, தொடர்ந்து அந்த நிலையிலேயே இருந்து வரவேண்டும். 54,791, 54,693, மற்றும் 54,613 போன்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும்; 55,002, 55,116 மற்றும் 55,197 என்ற நிலைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் நிப்டி பேங்க் செயல்பட வாய்ப்புள்ளது.
பொறுப்பு துறப்பு: 
 
பங்குச்சந்தையில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னால், செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, அவற்றில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்த அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து முதலீட்டை மேற்கொள்ளவும். மேலே தரப்பட்டுள்ள விவரங்கள் சரியானவைதானா என்றும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்த்துக்கொள்வது வாசகர்/முதலீட்டாளரின் முழுப்பொறுப்பாகும். இதில் தவறுகள் ஏதும் இருந்தாலோ / இதனை நம்பி செயல்பட்டு வரக்கூடிய எந்த விதமான நஷ்டத்துக்கோ 'தினமலர்' நாளி தழோ அல்லது அதைச் சார்ந்த நபர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பங்கு விலை/வால்யூம் குறித்த தகவல்கள் www.nseindia.com இணையதளத்தில் இருந்து திரட்டப்பட்ட நாள்: செப்டம்பர் 15, 2025.

