/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
9 மாநிலங்களில் அதிக பணவீக்கம்
/
9 மாநிலங்களில் அதிக பணவீக்கம்
ADDED : ஜன 13, 2024 07:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த டிசம்பர் மாதத்தில் 5.69 சதவீதமாக இருந்தது என, என்.எஸ்.ஓ., என்னும் தேசிய புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களின் பணவீக்கம், நாட்டின் பணவீக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில், தமிழகத்தில் பணவீக்கம் 4.97 சதவீதமாக இருந்தது என என்.எஸ்.ஓ., தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா 8.73
குஜராத் 7.07
ராஜஸ்தான் 6.95
ஹரியானா 6.72
கர்நாடகா 6.65
தெலங்கானா 6.65
மகாராஷ்டிரா 6.08
பஞ்சாப் 5.95
பீஹார் 5.89

