/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எல்.ஐ.சி.யின் புதிய பென்ஷன் திட்டம் 'ஜீவன் தாரா 2' அறிமுகம்
/
எல்.ஐ.சி.யின் புதிய பென்ஷன் திட்டம் 'ஜீவன் தாரா 2' அறிமுகம்
எல்.ஐ.சி.யின் புதிய பென்ஷன் திட்டம் 'ஜீவன் தாரா 2' அறிமுகம்
எல்.ஐ.சி.யின் புதிய பென்ஷன் திட்டம் 'ஜீவன் தாரா 2' அறிமுகம்
ADDED : ஜன 23, 2024 10:53 PM

புதுடில்லி: பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.,யின் புதிய பென்ஷன் திட்டமான, 'ஜீவன் தாரா 2' திட்டத்தை, அதன் தலைவர் சித்தார்த்தா மொஹந்தி சமீபத்தில் துவக்கி வைத்தார்.
இத்திட்டம், நேற்று முன்தினம் முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இது ஒரு தனிநபர் சேமிப்புடன் கூடிய பங்குச் சந்தை சாராத, ஒத்திவைப்பு வசதியுடன் கூடிய பென்ஷன் திட்டமாகும். சந்தா தேதிக்கும், முதல் தவணை ஓய்வூதியம் பெறும் நேரத்துக்கும் இடைப்பட்ட காலம் ஒத்திவைப்பு காலம் எனப்படும்.
இத்திட்டத்தின் வாயிலாக 20 வயது முதல் 80 வயது வரை உள்ள நபர்கள் அனைவரும் பயன் பெறலாம்.
மேலும், பாலிசிதாரர், பாலிசி துவங்கும் போதே உத்தரவாதமளிக்கப்பட்ட பென்ஷன் தொகையை தேர்வு செய்யவும் முடியும். பாலிசிதாரர்கள் இத்திட்டத்தின் 11 வகையான பலன்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். வயது மூத்தோருக்கு அதிக பென்ஷன் வசதி தரும் இத்திட்டத்தில், ஒத்திவைப்பு காலத்தில் ஆயுள் காப்பீட்டு வசதியும் உள்ளது.
பாலிசி நடப்பில் உள்ள காலத்தில் முதிர்வு, இறப்பு உரிமம் பெறும் வசதியுடன் கூடிய இந்த திட்டம் ஓய்வு காலத்தில் உத்தரவாதமான, நிலையான பென்ஷன் வேண்டுவோருக்கு ஒரு சிறப்பான திட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

