/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'மஹிந்திரா ரிசார்ட்ஸ்' நிறுவனம் தமிழகத்தில் ரூ.800 கோடி முதலீடு
/
'மஹிந்திரா ரிசார்ட்ஸ்' நிறுவனம் தமிழகத்தில் ரூ.800 கோடி முதலீடு
'மஹிந்திரா ரிசார்ட்ஸ்' நிறுவனம் தமிழகத்தில் ரூ.800 கோடி முதலீடு
'மஹிந்திரா ரிசார்ட்ஸ்' நிறுவனம் தமிழகத்தில் ரூ.800 கோடி முதலீடு
ADDED : ஜன 18, 2024 11:39 PM

புதுடில்லி: 'மஹிந்திரா ஹாலிடேஸ் அண்டு ரிசார்ட்ஸ் இந்தியா' நிறுவனம், தமிழகத்தில் மூன்று பசுமை ஓய்வு விடுதிகளை அமைப்பதற்காக, 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில், மூன்று பசுமை ஓய்வு விடுதிகளை அமைப்பதற்கான 800 கோடி ரூபாய் முதலீடு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மஹிந்திரா ஹாலிடேஸ் நிறுவனம், தமிழக அரசுடன் கையெழுத்திட்டுள்ளது.
இது குறித்து நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஊட்டி மற்றும் கொடைக்கானலில், 'கிளப் மஹிந்திரா' ஏற்கனவே ஓய்வு விடுதிகளை நடத்தி வரும் நிலையில், தற்போது இந்த முதலீடுகள், நிறுவனத்தின் இருப்பை இரு மடங்காக அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு உத்தரகண்டில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கு அடுத்து, நிறுவனத்தின் இரண்டாவது பெரிய முதலீடாக இது இருக்கும். இதன் வாயிலாக, 1,500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தமிழகத்தில் எங்கு விடுதிகளை அமைக்க உள்ளது என்பது போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

