Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ இரண்டாவது வாரமாக சரிந்த சந்தைகள்

இரண்டாவது வாரமாக சரிந்த சந்தைகள்

இரண்டாவது வாரமாக சரிந்த சந்தைகள்


ADDED : ஜன 18, 2025 12:13 AM

Follow on Google

ADDED : ஜன 18, 2025 12:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

• வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. கடந்த மூன்று நாட்கள் சந்தை குறியீடுகள் கண்ட உயர்வு தடைபட்டது. வாராந்திர அடிப்படையில், தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக நிப்டி, சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு செய்தன

• தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் எதிரொலியாக, இந்திய சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போது சரிவுடன் துவங்கியது. தொடர்ந்து, முன்னணி நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறின. முதலீட்டாளர்கள் ஐ.டி., வங்கித்துறை பங்குகளை அதிகளவில் விற்றதால், சந்தை சரிவை கண்டது

• வர்த்தகத்தின் இடையே நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதம் வரை சரிவை கண்டன. முடிவில், சந்தை குறியீடுகள் கணிசமான இறக்கத்துடன் நிறைவு செய்தன

• நிப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 12 துறைகளில், ஏழு துறைகள் சார்ந்த பங்குகள் உயர்வு கண்டன. அதிகபட்சமாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறை குறியீடு, 1.56 சதவீதம் உயர்வு கண்டது. மாறாக, தகவல் தொழில்நுட்ப துறை குறியீடு, 2.68 சதவீதம் இறக்கம் கண்டது

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 3,318 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.17 சதவீதம் உயர்ந்து, 81.43 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா அதிகரித்து, 86.60 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் / இறக்கம் கண்டவை

 பி.பி.சி.எல்.,

 ரிலையன்ஸ்

 கோல் இந்தியா

 ஹிண்டல்கோ

 நெஸ்லே

அதிக இறக்கம் கண்டவை

 இன்போசிஸ்

 ஆக்ஸிஸ் பேங்க்

 ஸ்ரீராம் பைனான்ஸ்

 கோடக் பேங்க்

 விப்ரோ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap