தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ புதிய பங்கு வெளியீடுகள்

புதிய பங்கு வெளியீடுகள்

புதிய பங்கு வெளியீடுகள்


ADDED : ஜூன் 21, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 01:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எச்.டி.பி., பங்கு விலை ரூ.700 - -740 ஆக நிர்ணயம்


தனிநபர் மற்றும் சிறிய கடன்களை வழங்கி வரும் வங்கி சாராத நிதி நிறுவனமான எச்.டி.பி., பைனான்சியல் சர்வீசஸ், 12,500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதில், தாய் நிறுவனமான எச்.டி.எப்.சி., வங்கியின் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 10,000 கோடி ரூபாயும்; புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 2,500 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது.

இதனை எதிர்கால மூலதனத்துக்கும், கூடுதல் கடன்கள் வழங்கவும் பயன்படுத்த உள்ளது. வரும் 25 முதல் 27ம் தேதி வரை முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 700 --740 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 2ம் தேதி எச்.டி.பி., பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.

சாம்பவ் ஸ்டீல் டியூப் பங்கு விலை நிர்ணயம்


சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை தலைமையிடமாக கொண்டு, ஸ்டீல் குழாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சாம்பவ் ஸ்டீல் டியூப், 540 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஐ.பி.ஓ., வருகிறது. முதலீட்டாளர் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 100 கோடி ரூபாயும்; புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 440 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த நிதியை, கடனை திருப்பி செலுத்தவும், நிறுவனத்தின் பிற செலவுகளுக்கும் பயன்படுத்த உள்ளது. பங்கு ஒன்றின் விலை, 77 - -82 ரூபாயாக நிர்ணயித்துள்ள இந்நிறுவனம், வரும் 25 முதல் 27ம் தேதி வரை, பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. ஜூலை 2ல், இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.

ரூ.2,500 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிடும் சம்வர்தனா மதர்சன்


உ.பி.,யின் நொய்டாவைச் சேர்ந்த வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல், பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியீடு வாயிலாக 2,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இவை முதிர்வடையும் காலத்தை பொறுத்து, முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் தொகை திருப்பி செலுத்தப்படும்.

திரட்டும் நிதியை நிறுவனத்தின் மூலதன செலவுகள், கையகப்படுத்தல் மற்றும் முந்தைய கடன்களை திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்த இருப்பதாக சம்வர்தனா மதர்சன் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 14 புதிய மையங்களை அமைக்க, 6,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us