சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம் / பங்கு சந்தை நிலவரம்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
பங்கு சந்தை நிலவரம்
ADDED : ஜன 26, 2024 02:20 AM
முந்தைய முடிவு: 71,060.31நேற்றைய முடிவு: 70,700.67மாற்றம்: 359.64 இறக்கம்
முந்தைய முடிவு : 21,454.00நேற்றைய முடிவு: 21,352.60மாற்றம்: 101.40 இறக்கம்
அடுத்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், வர்த்தகர்கள், இப்போதே உஷாராக லாப பதிவு செய்துகொள்ளத் துவங்கிவிட்டனர். சர்வதேச அளவிலும் உற்சாகமான செய்திகள் இல்லை. மூன்றாம் காலாண்டு முடிவுகளும் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. கச்சா எண்னெய் விலை உயர்வு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிரச்னை என்று எந்த மாற்றமும் இல்லாமல் பிரச்னைகள் அப்படியே தொடரவும் செய்கின்றன. அதனால் காலை முதலே நஷ்டத்தில் இருந்த நமது பங்குச் சந்தைகள் மாலையிலும் நஷ்டத்துடனேயே முடிவடைந்தன அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வேறு, ஜனவரியில் இதுவரை 33 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நமது பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதில், ஜனவரி 24 அன்று மட்டும், 6,934 கோடி ரூபாய்க்கு விற்பனை வரும் 2024 -- 25 நிதியாண்டில், நமது நிதிப் பற்றாக்குறை, ஜி.டி.பி.யில் 5.50 சதவீதமாக இருக்கும் என்று எஸ்.பி.ஐ.யின் பொருளாதார ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது இந்தியாவில் முதலீடு செய்து வரும் தனியார் முதலீட்டாளர்கள், வென்ச்சர் கேப்பிடல் பண்டுகள் ஆகியவை, 2023ல் செய்துள்ள முதலீடுகள் குறைந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டும் முதலீடுகள் குறைந்திருந்தன இந்த நடப்பு நிதியாண்டில், வங்கிகளின் கடன் கொடுக்கும் விகிதம் 14.90 - 15.30 சதவீதம் அளவுக்கு வளரும் என்று கணித்த சந்தை ஆய்வு நிறுவனமான 'இக்ரா', அடுத்த நிதியாண்டில் இதன் அளவு 12 சதவீதமாகக் குறைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது பட்ஜெட் பயத்தால் தாக்கப்பட்ட நமது பங்குச் சந்தைகளில், வர்த்தக நேர இறுதியில், மனை வணிக பங்குகளின் குறியீட்டைத் தவிர, இதர துறை சார்ந்த குறியீடுகள் அனைத்தும் நஷ்டத்தில் முடிவடைந்தன. குறிப்பாக, நிதிச் சேவைகள், மருந்துகள், வங்கிகள், தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருட்கள், சுகாதாரம் சார்ந்த பங்குகள் அதிக அளவில் விழுந்தன.
பஜாஜ் ஆட்டோ அதானி போர்ட்ஸ் என்.டி.பி.சி., கோல் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி
டெக் மஹிந்திரா சிப்லா பார்தி ஏர்டெல் எல்.டி.ஐ. மைண்டுட்ரீ எஸ்.பி.ஐ. லைப் இன்ஷூரன்ஸ்