/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஐ.பி.ஓ., வருகிறது ஸ்டட்ஸ் ஹெல்மெட்
/
ஐ.பி.ஓ., வருகிறது ஸ்டட்ஸ் ஹெல்மெட்
ADDED : மார் 28, 2025 12:58 AM

ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்ஸ் அக்சசரீஸ், புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கேட்டு, செபியிடம் விண்ணப்பித்து உள்ளது.
ஹரியானாவின் பரீதாபாதை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டட்ஸ் அக்சசரீஸ், ஹெல்மெட், இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் கையுறை, மழைநீர் அங்கி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை தயாரித்து, ஸ்டட்ஸ், எஸ்.எம்.கே., பிராண்டு பெயரில், இந்தியாவில் மட்டுமின்றி, 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீடு வாயிலாக, முதலீட்டாளர்கள் வசமுள்ள 77.9 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஸ்டட்ஸ் அக்சசரீஸ், முதல்முறையாக ஐ.பி.ஓ.,வுக்கு விண்ணப்பித்து, செபியின் அனுமதியை பெற்றது. ஆனால், பங்கு வெளியீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளது.