sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வீட்டு வாடகை 20 சதவீதம் வரை கிடுகிடு உயர்வு: காலி வீடுகளுக்கும் கடும் தட்டுப்பாடு

/

வீட்டு வாடகை 20 சதவீதம் வரை கிடுகிடு உயர்வு: காலி வீடுகளுக்கும் கடும் தட்டுப்பாடு

வீட்டு வாடகை 20 சதவீதம் வரை கிடுகிடு உயர்வு: காலி வீடுகளுக்கும் கடும் தட்டுப்பாடு

வீட்டு வாடகை 20 சதவீதம் வரை கிடுகிடு உயர்வு: காலி வீடுகளுக்கும் கடும் தட்டுப்பாடு


UPDATED : மே 16, 2025 02:47 PM

ADDED : மே 16, 2025 02:42 PM

Google News

UPDATED : மே 16, 2025 02:47 PM ADDED : மே 16, 2025 02:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டுமான நிறுவனங்கள் புதிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வந்தாலும், 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடித்து, விற்காமல் உள்ளது. இந்நிலையில், வாடகை வீடுகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

குறிப்பிட்ட சில இணையதளங்கள் மற்றும் உள்ளூர் தரகர்கள் தலையீடு அதிகரிப்பால், காலி வீடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

வீட்டு உரிமையாளர் நியாயமாக நிர்ணயிக்கும் வாடகையைக்கூட உள்ளூர் தரகர்கள், தங்கள் கமிஷனுக்காக உயர்த்தி, மக்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:

தற்போதைய நிலவரப்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஒரு படுக்கை அறை வீடுகள் தேவை 11 சதவீதமாகவும், இரண்டு படுக்கை அறை வீடுகளின் தேவை 66 சதவீதமாகவும், மூன்று படுக்கை அறை வீடுகளின் தேவை 23 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் சொத்து வரி, குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணம், மின்சார கட்டணம் போன்றவையும் வெகுவாக உயர்த்துள்ளன.

இதை கருத்தில் வைத்து தான் பெரும்பாலான உரிமையாளர்கள் வீட்டுக்கான வாடகையை நடப்பு ஆண்டில், 20 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். வாடகை வீடு விவகாரங்களுக்கான ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் இதில் தலையிடுவது இல்லை.

பகுதி ஒரு படுக்கை அறை 2 படுக்கை அறை வாடகை ரூபாயில்திருவொறியூர் விம்கோ நகர் 8,000 - 10,000 12,000 - 15,000 மணலி 5,000 - 7,000 8,000 - 10,000 பெருங்களத்துார் 7,500-12,000 9,000- 18,000தாம்பரம் 10,000- 15,000 12,000 - 25,000பல்லாவரம் 10,000-13,000 15,000- 20,000அண்ணா நகர் 10,000 - 30,000 25,000 - 60,000 அரும்பாக்கம் 12,000 - 15,000 20,000 - 30,000 அமைந்தகரை 10,000 - 15,000 18,000 - 23,000 வில்லிவாக்கம் 7,000 - 10,000 12,000 - 15,000 கீழ்ப்பாக்கம் 12,000 - 20,000 18,000 - 40,000சேத்துப்பட்டு 10,000 - 19,000 15,000 - 50,000தி.நகர் 12000 - 15000 20,000 - 35,000கே.கே.நகர் 10000 - 15000 18,000 - 30,000வடபழனி 10000 - 18,000 18, 000 - 30,000போரூர் 6,500 - 25,000 15,000 - 35,000மதுரவாயல் 8,000 - 15,000 12,000 - 35,000நொளம்பூர் 9,000 - 20,000 18,000 - 30,000ராமாபுரம் 8,000 - 20,000 18,000 - 33,000வேளச்சேரி 10,000 - 15,000 18,000 - 20,000நங்கநல்லுார், மடிப்பாக்கம் 9,000 - 10,000 12,000 - 16,000அம்பத்துார், கொரட்டூர் 7,000 - 11,000 11,000 - 20,000* கார் பார்க்கிங் வசதிக்கு கூடுதல் கட்டணம் உண்டு.








      Dinamalar
      Follow us