10 அதிகாரிகளும் சொத்து குவிப்பு லோக் ஆயுக்தா 'ரெய்டி'ல் அம்பலம்
10 அதிகாரிகளும் சொத்து குவிப்பு லோக் ஆயுக்தா 'ரெய்டி'ல் அம்பலம்
ADDED : பிப் 01, 2024 11:09 PM
பெங்களூரு: லோக் ஆயுக்தா 'ரெய்டு'க்கு ஆளான, அரசு அதிகாரிகள் 10 பேரும், கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது தெரிய வந்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கர்நாடகா அரசு அதிகாரிகள் 10 பேரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகள் என, நேற்று முன்தினம் 40 இடங்களில், லோக் ஆயுக்தா போலீசார் ரெய்டு நடத்தினர்.
அவர்கள் 10 பேரும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது தெரிய வந்துள்ளது.
மாண்டியா பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஹர்ஷாவுக்கு மூன்று நிலம், 30 ஏக்கரில் இரண்டு வீடுகள் உட்பட 2.35 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துகள்; பணம், வாகனங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என 2.15 கோடி ரூபாய்க்கு, அசையும் சொத்துகள் வாங்கியது தெரிய வந்துள்ளது.
விஜயநகரா ஹுவின அடஹள்ளி மண்டல வன அதிகாரி ரேணுகம்மா 2.77 கோடி ரூபாய்; துமகூரு கர்நாடகா ரூரல் தொழில் வளர்ச்சி கழக ஜுனியர் இன்ஜினியர் ஹனுமந்தராயப்பா 2.55 கோடி ரூபாய்;
பல்லாரி அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் ரவி 2.16 கோடி ரூபாய்; கெஸ்காம் நிர்வாக செயற்பொறியாளர் பாஸ்கர் 1.74 கோடி ரூபாய்.
ஹுன்சூர் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் 2.07 கோடி ரூபாய்; வணிக வரி அதிகாரி நேத்ராவதி 1.98 கோடி ரூபாய்; மைசூரு மூடா நிர்வாக செயற்பொறியாளர் யக்னேந்திரா 1.06 கோடி ரூபாய்; மெஸ்காம் இரண்டாம் நிலை உதவியாளர் சாந்தகுமார் 2.44 கோடி ரூபாய்; ஹாசன் உணவு துறை இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத் 1.90 கோடி ரூபாய் என்று, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர்.

