sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

10 சதவீதம் கூடுதல் இலவச மின்சாரம்; கர்நாடக அமைச்சரவை கூட்டம் முடிவு

/

10 சதவீதம் கூடுதல் இலவச மின்சாரம்; கர்நாடக அமைச்சரவை கூட்டம் முடிவு

10 சதவீதம் கூடுதல் இலவச மின்சாரம்; கர்நாடக அமைச்சரவை கூட்டம் முடிவு

10 சதவீதம் கூடுதல் இலவச மின்சாரம்; கர்நாடக அமைச்சரவை கூட்டம் முடிவு


ADDED : ஜன 19, 2024 12:43 AM

Google News

ADDED : ஜன 19, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'கிரஹ ஜோதி' திட்டத்தின் கீழ், தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதை, கூடுதலாக 10 சதவீதம் இலவசமாக வழங்க, கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்தது. முக்கியமான, 30 விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எம்.எல்.சி., இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பின், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது:

l கர்நாடக மின் வாரியங்களில், 4,430 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தது. இதற்கு அரசு உத்தரவாதம் அளித்த தீர்மானம்

l 'கிரஹ ஜோதி' திட்டத்தின் கீழ், தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதை, கூடுதலாக 10 சதவீதம் இலவசமாக வழங்க முடிவு

l அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைத்து செயல்பட, மாணவர்களுக்கு உதவும் வகையில் கால் சென்டர் அமைக்கப்படும்

l 20 ஆண்டுகளாக தலித்களின் உட்பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. 101 உட்பிரிவுகள் உள்ளன. இவற்றிற்கு பார்லிமென்ட் மூலம் மட்டுமே உள் ஒதுக்கீடு வழங்க முடியும் என்பதால், மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய ஒப்புதல்

l ஷிவமொகாவில் உள்ள சுதந்திர பூங்காவிற்கு, அல்லம பிரபு என்றும்; பெலகாவியின் கித்துார் பகுதி, சென்னம்மா கித்துார் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்

l சாலை வரியை குறைக்கவும்; பழைய வாகனங்களை ஸ்கிராப்பிற்கு போடும் உரிமையாளர்களுக்கும்; புதிய எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கும் மானியம் வழங்க முடிவு.

இவ்வாறு அவர் கூறினார்.

கலாசார தலைவராக பசவண்ணர்

பல்வேறு மடாதிபதிகள், அமைப்புகள், அமைச்சர்கள் என பல தரப்பிலும், கர்நாடக கலாசார தலைவராக பசவண்ணரை அறிவிக்கும்படி அரசை வலியுறுத்தி வந்தனர். இது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஒருமனதாக கர்நாடக கலாசார தலைவராக பசவண்ணர் தேர்வு செய்யப்பட்டார். அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.








      Dinamalar
      Follow us