குஜராத்தில் படகு கவிழ்ந்து 14 மாணவர்கள் பரிதாப பலி
குஜராத்தில் படகு கவிழ்ந்து 14 மாணவர்கள் பரிதாப பலி
ADDED : ஜன 19, 2024 01:11 AM

வடோதரா, குஜராத் மாநிலத்தில் ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் 14 பேர், ஆசிரியர்கள் இருவர் பலியாகினர்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகரில் ஹரினி என்ற பிரசித்தி பெற்ற ஏரி உள்ளது.
இந்த ஏரிக்கு நேற்று பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட, 27 பேர் சுற்றுலா சென்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு படகு புறப்பட்டது.
ஏரியின் மையப்பகுதியில் படகு சென்ற போது, திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 14 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாயமான மற்ற மாணவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

