3 நாள் ஹம்பி உற்சவம் இன்று துவக்கம் ஹெலிகாப்டரில் சுற்றி பார்க்க ஏற்பாடு
3 நாள் ஹம்பி உற்சவம் இன்று துவக்கம் ஹெலிகாப்டரில் சுற்றி பார்க்க ஏற்பாடு
ADDED : பிப் 01, 2024 11:12 PM

விஜயபுரா: பிரசித்தி பெற்ற ஹம்பி மூன்று நாள் நாள் உற்சவத்தை முதல்வர் சித்தராமையா இன்று துவக்கி வைக்கிறார். ஹம்பி நகரை சுற்றிப்பார்க்கும் வகையில் 'ஹம்பி பை ஸ்கை' ஹெலிகாப்டர் சேவை நேற்று துவங்கியது.
ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற ஹம்பி உற்சவம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு ஹம்பி உற்சவம் நடத்த, 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி, விஜயபுரா மாவட்ட நிர்வாகம், அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், கர்நாடகாவில் கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சி பாதிப்பு காரணமாக, 14 கோடி ரூபாயை மட்டுமே அரசு ஒதுக்கி உள்ளது.
இதையடுத்து, இன்று முதல் மூன்று நாட்கள் விஜயநகராவில் நடக்கும் ஹம்பி உற்சவத்தில் கிராம விளையாட்டு, கோலப்போட்டி, இசை, சாகச விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
பிரபல இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள் பங்கேற்க உள்ளனர். அங்குள்ள துங்கா நதியில் 'துங்கா ஆரத்தி' நடக்க உள்ளது. இதற்கான பணிகளை, கடந்த வாரமே மாவட்ட நிர்வாகம் செய்தது.
ஹம்பி உற்சவத்தின் ஒரு பகுதியாக, 'ஹம்பி பை ஸ்கை' ஹெலிகாப்டர் சேவையை நேற்று மாவட்ட கலெக்டர் திவாகர், எம்.எல்.ஏ., கவியப்பா மகன் விருபாக் ஷா துவக்கி வைத்தனர்.
கலெக்டர் திவாகர் அளித்த பேட்டி:
ஹம்பி நினைவு சின்னங்களை பார்ப்பது கண்களுக்கு விருந்து. இதனை சுற்றுலா பயணயர் நடந்து சென்று பார்ப்பது வழக்கம். ஆகாயத்தில் இருந்து ஹம்பி நினைவு சின்னங்களை பார்ப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கும்.
இதனால் ஹம்பி திருவிழாவின் போது, ஆர்வமுள்ள சுற்றுலா பயணியர், 3,800 முதல் 4,300 வரை கட்டணம் செலுத்தினால் ஹெலிகாப்டரில் பறக்கலாம்.
நான்கு நாட்களுக்கு இச்சேவை கிடைக்கும். கமலாபுரா, விஜயவிட்டலா, விருபாக் ஷா, அஞ்சனாத்ரி மலையை கண்டு மகிழ்ந்தேன். இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.
ஹம்பி உற்சவத்தின் ஒரு பகுதியாக, 'ஹம்பி பை ஸ்கை' ஹெலிகாப்டர் சேவையை, கலெக்டர் திவாகர் துவக்கி வைத்தார். இடம்: ஹம்பி, விஜயநகரா.

