ADDED : மார் 26, 2025 08:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஹம்சா. இவர், தன் ஆறு வயது மகன் ஹனான் உடன் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, உறவினர் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, ஸ்கூட்டரின் கீழ்பகுதியில் இருந்து திடீரென தீ பற்றி எரிந்தது.
இதில், ஸ்கூட்டரின் முன்பக்கம் நின்று கொண்டிருந்த ஹனான் காலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஹம்சா ஸ்கூட்டரை அங்கேயே நிறுத்தி விட்டு, ஹனானை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஸ்கூட்டர் தீப்பற்றியது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.