ADDED : ஜன 23, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்:ஹரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த 70 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, 18 இடங்களில், அமலாக்கத்துறையினர் நேற்று, அதிரடி சோதனை நடத்தினர்.
ஹரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் 70 கோடி ரூபாய் பணமோசடி நடந்தது குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் சண்டிகர், மொஹாலி, பஞ்ச்குலா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலம் மாவட்டத்தில் ஒரு இடம் உட்பட 18 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த ஆணையம் தற்போது, 'ஹரியானா ஷஹாரி விகாஸ் பிரதிகரன்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் ஆறு உயர் அதிகாரிகள், தீவிர விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.

