17ல் கிரிக்கெட் போட்டியை காண கூடுதல் பி.எம்.டி.சி., பஸ்கள்
17ல் கிரிக்கெட் போட்டியை காண கூடுதல் பி.எம்.டி.சி., பஸ்கள்
ADDED : ஜன 13, 2024 11:08 PM
பெங்களூரு: வரும் 17ல் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக, கூடுதல் பஸ் இயக்க பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.
இது குறித்து, பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின், சின்னச்சாமி விளையாட்டு அரங்கில், வரும் 17ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, டி20 கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் கிரிக்கெட் போட்டியை காண வருவர். இவர்களின் வசதிக்காக கூடுதல் பஸ் இயக்க, பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.
சின்னச்சாமி விளையாட்டு அரங்கில் இருந்து, காடுகோடி, சர்ஜாபுரா, கெங்கேரி, நெலமங்களா, பாகலுார், எலக்ட்ரானிக் சிட்டி, பன்னரகட்டா நேஷனல் பூங்காவுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
எஸ்.பி.எஸ்., - 1 எண் கொண்ட பஸ், எச்.ஏ.எல்., வழியாக காடுகோடி செல்லும். எஸ்.டி.எஸ்., - 13 எண் கொண்ட பஸ், ஹூடி வழியாக காடுகோடி பஸ் நிலையம் சென்றடையும்.
ஜி-2 பஸ் அகரா, தொம்மசந்திரா வழியாக சர்ஜாபுரா, ஜி - 3 ஓசூர் சாலை வழியாக எலக்ட்ரானிக் சிட்டி, ஜி - 4 பஸ் ஜெயதேவா மருத்துவமனை வழியாக பன்னரகட்டா தேசிய பூங்காவை அடையும்.
ஜி - 11 பஸ் ஹென்னுாரு சாலை வழியாக, பாகலுார் வரை செல்லும். கே.எச்.பி. - 12 பஸ் டின் பேக்டரி வழியாக ஹொஸ்கோட் வரை செல்லும். ஜி - 6 பஸ் மைசூரு சாலை, நாயண்டஹள்ளி வழியாக கெங்கேரி கே.எச்.பி., குடியிருப்பை அடையும்.
ஜி - 7 பஸ் மாகடி சாலை வழியாக, ஜனப்பிரியா டவுன்ஷிப், ஜி - 8 பஸ் யஷ்வந்த்பூர் வழியாக நெலமங்களா சென்றடையும். ஜி - 9 பஸ் எலஹங்கா ஐந்தாவது ஸ்டேஜ், ஜி - 10 பஸ் நாகவாரா, டானரி சாலை வழியாக ஹெக்டேநகர், எலஹங்கா செல்லும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

