ADDED : பிப் 24, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : சட்டமேலவையில் மசோதா ஒன்றில், கர்நாடக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
கர்நாடக ஹிந்து தார்மீக அமைப்புகள் மற்றும் அறக்கட்டளை திருத்த மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, அங்கீகாரம் பெற்றது. நேற்று சட்டமேலவையில் தாக்கல் செய்து, அங்கீகரிக்கும்படி கோரப்பட்டது.
சட்டமேலவை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த துணை சபாநாயகர் பிரானேஷ், இந்த மசோதாவை குரல் ஓட்டுப் பதிவுக்கு வைத்தார். மசோதாவுக்கு ஆதரவாக 10 ஓட்டுகளும்; எதிர்ப்புத் தெரிவித்து 18 ஓட்டுகளும் பதிவாகின.
மசோதா நிராகரிக்கப்பட்ட பின், பா.ஜ., உறுப்பினர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என, கோஷமிட்டனர். அதற்கு பதிலாக காங்கிரஸ் உறுப்பினர்கள், 'பாரத் மாதா கி ஜெய், ஜெய்பீம்' என, கோஷமிட்டனர்.

