sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

‛போயிங் 787' விமானம் காலப்போக்கில் விபத்தில் சிக்கும்: இன்ஜினியரின் வாக்குமூலம்

/

‛போயிங் 787' விமானம் காலப்போக்கில் விபத்தில் சிக்கும்: இன்ஜினியரின் வாக்குமூலம்

‛போயிங் 787' விமானம் காலப்போக்கில் விபத்தில் சிக்கும்: இன்ஜினியரின் வாக்குமூலம்

‛போயிங் 787' விமானம் காலப்போக்கில் விபத்தில் சிக்கும்: இன்ஜினியரின் வாக்குமூலம்

14


Google News

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அகமதாபாத்: விபத்தில் சிக்கிய போயிங் 787 விமானம் குறித்து அந்த விமான திட்டத்தில் பணிபுரிந்த அமெரிக்க இன்ஜினியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆமதாபாதில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் 'போயிங் 787 ட்ரீம்லைன்லர்' வகையைச் சேர்ந்தது. இந்த விமான திட்டத்தில் பணிபுரிந்த அமெரிக்க இன்ஜினியர் சாம் சலேபோர் போயிங் 787 விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்தில் சிக்கும் என்பதை பல்வேறு பேட்டிகள், செனட் சபை ஆகியவற்றில் விளக்கி உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

'போயிங் 787 ட்ரீம்லைன்லர்' விமானங்களின் உற்பத்தி செயல்முறையில் தீவிரமான குறைபாடுகளை கண்டேன். பியூஸ்லேஜ் எனப்படும் விமானத்தின் உடற்பகுதிகளை இணைக்கும் போது, சரியான இணைப்பு முறைகள் பின்பற்றப்படவில்லை.

பொருந்தாத பாகங்களின் மீது ஊழியர்கள் ஏறி குதித்து அவற்றை சரிசெய்தனர். இது விமானத்தின் உடற்பகுதியில் கண்ணுக்கு தெரியாத இடைவெளிகளை உருவாக்கும். ஆயிரக்கணக்கான பயணங்களுக்குப் பின், இந்தக் குறைபாடுகள் பேரழிவுக்கு வழிவகுக்கும். இந்தப் பிரச்னைகளை நான் எழுப்பிய போது போயிங் நிர்வாகம் வெளிப்படையாக வாயை மூடு என்றது இவ்வாறு அவர் கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar