ADDED : ஜன 23, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலியா:உத்தர பிரதேசத்தில், ஒன்பது வயது சிறுமியை பலாத்காரம் செய்த, 14 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.
பலியா மாவட்டம் பெப்னா அருகே உள்ள ஒரு கிராமத்தில், கடந்த 20ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த ஒன்பது வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் வசித்த, 14 வயது சிறுவன், பாலியல் பலாத்காரம் செய்தான்.
சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து, சிறுவனை கைது செய்தனர்.

