ADDED : ஜன 19, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடகு : ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஏரியில் விழுந்தது. இதில் பயணித்த ஐந்து பேர் காயம் அடைந்தனர்.
குடகு, சோமவாரபேட்டின், யடூரு கிராமத்தில் ஏரி பாதையில் நேற்று மதியம், ஒரு கார் வேகமாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், ஏரியில் விழுந்தது.
இதில் இருந்த எட்டு பேர், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்தனர். இவர்களில் ஜோதி, லட்சுமி, மனு, சீதம்மா உட்பட ஐவர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
ஏரியை சுற்றிலும் தடுப்பு சுவர் இல்லாததே, இதுபோன்ற அசம்பாவிதத்துக்கு காரணம் என, கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
'மல்லள்ளி நீர்வீழ்ச்சி, புஷ்பகிரி மலைக்கு இதே வழியாக சுற்றுலா பயணியர் செல்கின்றனர். ஏரிக்கு தடுப்பு சுவர் கட்டினால், விபத்துகளை தடுக்கலாம்' என, வலியுறுத்துகின்றனர்.

