sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

/

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 ரூபாய் 14 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

நம் நாடு, உலகளாவிய வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்திலேயே உள்ளது. சந்தையில் டாலருக்கான தேவை அதிகமாக இருப்பது, ரூபாயின் மீட்சியை தடுக்கிறது. இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவையும், ரூபாய் மதிப்பு சரிய காரணமாக அமைந்துள்ளன.

அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றாலும், நவம்பர் மாதத்தில், இந்திய கடன் சந்தையில் 62.30 கோடி டாலரை முதலீடு செய்துள்ளனர். இது, ரூபாய் மதிப்பு மேலும் சரிவதை தடுக்க ஒரு முக்கிய ஆதரவாக இருக்கிறது. நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 89.94 என்ற இதுவரை இல்லாத சரிவை தொட்டது. வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு 89.87ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று (டிச.,03) காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது. தற்போது, ரூ.90.14 ஆக உள்ளது. முதல் முறையாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90ஐ கடந்துள்ளது. இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தாமதம், உலக சந்தையில் நிலையற்ற தன்மையும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமாக உள்ளன.

பெரிய நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக டாலர் மதிப்பு உயர்ந்து வருவதாலும் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar