ஹொய்சாளர் காலத்து கல்வெட்டு மாண்டியாவில் வல்லுனர்கள் ஆய்வு
ஹொய்சாளர் காலத்து கல்வெட்டு மாண்டியாவில் வல்லுனர்கள் ஆய்வு
ADDED : ஜன 23, 2024 05:40 AM
மாண்டியா: நாகமங்களாவில், ஹொய்சtளர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
மாண்டியா, நாகமங்களாவின், மாச்சலகட்டா என்ற குக்கிராமத்தில் மல்லேஸ்வரா கோவில் உள்ளது. சில நாட்களுக்கு முன், கோவில் அருகில் சீரமைப்பு பணிகள் நடந்த போது, கல்வெட்டு ஒன்று கிடைத்தது. இதனை வரலாற்று வல்லுனர்கள், ஆய்வு செய்கின்றனர்.
இது ஹொய்சtளர்கள் காலத்து கல்வெட்டாகும். சாசனங்கள் மற்றும் ரேகை படங்கள் உள்ளன. 16ம் நுாற்றாண்டில் செதுக்கப்பட்டது. துஷ்ட சக்திகளை விரட்ட, இந்த கல்லை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கல்வெட்டின் மேற் புறத்தில், தேவதையின் உருவம், சூரியன், சந்திரனின் உருவங்கள் தென்படுகின்றன. கீழ் புறத்தில் வாஸ்து மண்டலங்களின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. 20 வீடுகளின் படங்கள் உள்ளன. மந்திர வார்த்தைகள் செதுக்கப்பட்டுள்ளன. அதை சுற்றிலும் திரிசூலங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
கல்லின் பாதி பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மற்ற பாதி, மண்ணில் புதைந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. பிரிமியர் சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் லேங்க்வேஜஸ் வல்லுனர்கள், கல்வெட்டை ஆய்வு செய்வதில் ஈடுபட்டுஉள்ளனர்.

