தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நாடகமாடுகிறார்!

 நாடகமாடுகிறார்!

 நாடகமாடுகிறார்!


ADDED : ஜூன் 02, 2026 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 02:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி., கல்யாண் பானர்ஜியை யாரும் தாக்கவில்லை. அவர் நாடகமாடுகிறார். பார்லி.,யிலும் அவர், இது போல பல முறை நாடகமாடி உள்ளார். மக்களின் அனுதாபத்தை பெற அவரும், அவரது கட்சியினரும் முயற்சிக்கின்றனர். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

திலீப் கோஷ் மேற்கு வங்க அமைச்சர், பா.ஜ.,

பொறுமையாக இருக்க மாட்டேன்!


ஆந்திர தலைவர் களின் முகவராக, தெலுங்கானா காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி செயல்படுகிறார். தெலுங்கானாவின் உள் விவகாரம் மற்றும் கலாசார விவகாரங்களில், ஆந்திர தலைவர்களின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நான் மற்றவர்களை போல பொறுமையாக இருக்க மாட்டே ன்.

கவிதா தலைவர், தெலுங்கானா ரக்ஷன சேனா கட்சி

ராஜினாமா செய்ய வேண்டும்!


பிளஸ் 2 விடைத்தாள் ஆன்லைன் மதிப்பீட்டு முறையில் நிலவிய பாதுகாப்பு குறைபாடுகளை, சி.பி.எஸ்.இ., முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இதை மேற்கொண்ட, 'கோம்ப்ட் எட்யூ டெக்' நிறுவனத்தை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது. இதற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்.

ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us