ADDED : ஜன 23, 2024 05:55 AM

கொப்பால்:கொப்பால் ராமர் கோவிலில், ஹிந்து - முஸ்லிம்கள் ஒன்றாக இணைந்து, சிறப்பு பூஜை செய்து, ராமரை வழிபட்டனர்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பை ஒட்டி, கர்நாடகாவில் உள்ள ராமர், ஹனுமன் கோவில்களில் நேற்று காலை முதல், சிறப்பு பூஜைகள் நடந்தது.
கொப்பால் டவுன் பாக்ய நகரில் உள்ள, ராமர் கோவிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஹிந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், ராமருக்கு நடந்த சிறப்பு பூஜை, அபிஷேகத்தில் முஸ்லிம்களும் பங்கேற்றனர். அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு திறந்ததற்காக, ஹிந்து அமைப்பினருக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.
இதுகுறித்து முஸ்லிம்கள் சிலர் கூறுகையில், 'ஹனுமன் பிறந்த இடத்தில், நாம் வாழ்க்கிறோம். ஜாதி, மத பாகுபாடுகளை துாக்கி எறிய வேண்டும். எங்கள் பகுதியில் ஹிந்து - முஸ்லிம்கள் சகோதரத்துவத்தை பின்பற்றுகிறோம்.
ஹிந்துக்கள் வீட்டில் நடக்கும் பண்டிகைகளுக்கு நாங்கள் செல்கிறோம். அவர்களும் எங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.

