ADDED : பிப் 02, 2024 01:51 AM
புதுடில்லி: நாட்டு மக்களின் சராசரி வருமானம், 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் பணவீக்கம் குறைந்துள்ளதாகவும் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மக்களின் சராசரி வருமானம், 50 சதவீதம் அதிகரித்துள்ளது. வருவாய் மேம்பட்டுள்ளதையடுத்து, எதிர்காலம் குறித்த சிறந்த கண்ணோட்டத்துடன் மக்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே, சிறப்பான உள்நாட்டு பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வலுவான முதலீடுகள் காரணமாக, நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளது.
பசியை போக்கிய ரேஷன்
இலவச ரேஷன் திட்டம் வாயிலாக, 80 கோடி பேரின் பசி பட்டினி அரசால் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடி பேரின் வறுமை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில், இலவச ரேஷன் திட்டம் மேலும் ஐந்து ஆண்டு களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

