ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு இதோ உதவி எண்கள்: தூதரகம் முக்கிய அறிவிப்பு
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு இதோ உதவி எண்கள்: தூதரகம் முக்கிய அறிவிப்பு
ADDED : ஜூன் 15, 2025 09:56 PM

புதுடில்லி; ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களையும், டெலிகிராம் இணைப்பு ஒன்றையும் இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள், அலுவலகங்கள், அணுசக்தி கட்டமைப்புகளை ஆபரேஷன் ரைசிங் லயன் என்னும் பெயரிட்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரானும் அதிரடியாக தாக்குதலை தொடர்ந்துள்ளது.
இதன் காரணமாக, மத்திய கிழக்கு பகுதியில் போர்ப் பதற்றம் முன்பை விட அதிகரித்துள்ளது. அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு இஸ்ரேல் அறிவுறுத்தி இருக்கிறது.
நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில், ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்காக உதவி எண்களை இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ளது.
அதன் விவரம் வருமாறு;
தொடர் எண்கள்: +989128109115. +989128109109
வாட்ஸ் அப் எண்கள்: +989115993320, +918086871709
டெலிகிராம் இணைப்பு; https;//t.me/indiansiniran
அனைத்து இந்திய நாட்டினரும் விழிப்புடன் இருக்கவும், தேவையற்ற நடமாட்டத்தைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் உள்நாட்டுப் படையின் கட்டளைகள், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்திய நாட்டினரின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது.
இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.