sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹார் தேர்தல் பிரசார வியூகத்தில் தும்பை விட்டு வாலை பிடிக்கிறதா பா.ஜ.,

/

பீஹார் தேர்தல் பிரசார வியூகத்தில் தும்பை விட்டு வாலை பிடிக்கிறதா பா.ஜ.,

பீஹார் தேர்தல் பிரசார வியூகத்தில் தும்பை விட்டு வாலை பிடிக்கிறதா பா.ஜ.,

பீஹார் தேர்தல் பிரசார வியூகத்தில் தும்பை விட்டு வாலை பிடிக்கிறதா பா.ஜ.,


ADDED : அக் 01, 2025 03:44 AM

Google News

ADDED : அக் 01, 2025 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் நாட்டின் ஒட்டுமொத்த பார்வையும் தற்போது பீஹார் மீது விழுந்து இருக்கிறது. நவம்பருக்குள் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பது தான் அதற்கு முக்கிய காரணம்.

இந்த தேர்தல், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கும், காங்., தலைமையிலான 'இண்டி' கூட்டணிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால், தேசிய அளவில் பீஹார் தேர்தல் மீது எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

சமீபத்தில் பீஹார் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பெண் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சுயதொழில் துவங்க 10,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்.

ஊடுருவல் பிரச்னை


இந்த திட்டத்தின் மூலம் அரசு நிதியை பெற்று, சாதித்தால், மேற்கொண்டு 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.

இதனால், பெண் வாக்காளர்கள் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி பக்கம் தற்போது திரும்பி இருப்பதாக பேசப்படுகிறது. அதே சமயம், மேற்குவங்கத்தை போல, பீஹாரிலும் ஊடுருவல் பிரச்னையை எழுப்ப பா.ஜ., திட்டமிட்டு வருகிறது.

அதை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 26 மற்றும் 27 ம் தேதிகளில் பீஹாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'வங்கதேசம், நேபாளம் என அண்டை நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்த ஊடுருவல்காரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என ராகுல் விரும்புகிறார்.

' சட்டவிரோதமாக பீஹாரில் தங்கியிருக்கும் அத்தகைய ஊடுருவல்காரர்களை காப்பாற்றவே, 'வாக்காளர் அதிகார யாத்திரை'யை அவர் நடத்தினார்' என, குற்றஞ்சாட்டி இருந்தார்.

மேலும், '243 தொகுதிகள் கொண்ட பீஹாரில், மூன்றில் இரு பங்கு மெஜாரிட்டியுடன், வெற்றி பெற்றால், பீஹாரில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் ஊடுருவல்காரர்களை விரட்டி அடிப்போம்' எனவும், அமித் ஷா பேசியிருக்கிறார்.

ஆனால், எதிர்க்கட்சியினரோ, அவரது பேச்சை கண்டு அதிரவில்லை. 'பீஹாரில் இருக்கும் ஊடுருவல்காரர்களை வெளியேற்ற மூன்றில் இருபங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

'மத்தியில் ஆட்சியில் இருப்பதால், ஊடுருவல்காரர்களை எப்போது வேண்டுமானாலும் எளிதாக விரட்டி அடிக்க முடியும். ஆனாலும், பா.ஜ.,வால் அதை செய்ய முடியாது.

' ஏனெனில் பீஹாரில் ஊடுருவல்காரர்கள் யாருமே இல்லை என்பது தான் உண்மை' என, பீஹார் மாநில காங்., தலைவர் ராஜேஷ் ராம் அடித்து கூறுகிறார்.

'அபத்தமானது'


ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவும், பா.ஜ., முன்வைக்கும் இந்த குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது என விமர்சித்துள்ளார்.

'மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவால், ஊடுருவல்காரர்களின் பெயர் பட்டியலை எளிதாக வெளியிட முடியும். அதை செய்யாமல், ஒரு பிரச்னையாக எழுப்புவது வேடிக்கையாக இருக்கிறது' என, கூறியுள்ளார்.

ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யும், ராஷ்ட்ரீய ஜனதா தள முன்னாள் அமைச்சருமான ஷிவானந்த திவாரியும், பா.ஜ., எழுப்பும் இந்த பிரச்னை வியப்பை அளிப்பதாக கூறியுள்ளார்.

'பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அல்லது வேறு எந்த பா.ஜ., தலைவராக இருந்தாலும், அனைவருமே இந்த ஒரே பிரச்னையை தான் எழுப்புகின்றனர். கடந்த 2014 முதல் பிரதமராக மோடி பதவி வகித்து வருகிறார்.

'அமித் ஷா, 2019 முதல் உள்துறை அமைச்சராக இருந்து வருகிறார். பீஹார் முதல்வராக 2005 முதல் நிதிஷ்குமார் இருந்து வருகிறார். இப்படி அதிகாரம் அனைத்தும் அவர்கள் வசம் இருக்கும்போது, பீஹாருக்குள், ஊடுருவல்காரர்கள் நுழைந்துவிட்டனர் என கூறினால், அதற்கு யார் பொறுப்பு?' என கேள்வி கேட்டு பா.ஜ.,வினரை மடக்குகிறார்.

பீஹார் தேர்தல் அரசியலுக்குள் புதிதாக நுழைந்திருக்கும் ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோரும், பா.ஜ.,வின் இந்த பிரசாரம் நிச்சயம் தேர்தலில் எடுபடாது என கணித்திருக்கிறார்.

'வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர் தொழிலாளர்கள் தான் பீஹாரின் மிக முக்கிய பிரச்னை. அதற்கு தீர்வு வழங்கும் விதத்தில் தான் பிரசாரம் செய்ய வேண்டுமே தவிர, ஊடுருவல் பிரச்னைக்கு அல்ல' என, தெளிவாக கூறியுள்ளார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ., தவறான திசையில் பயணிப்பதாக விமர்சித்துள்ளது.

செவி சாய்க்குமா?


இரு ஆண்டுகளாக நிதிஷ் குமார் தலைமையில் அரசு மேற்கொண்டு வந்த வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்வது தான் சரியாக இருக்கும் என ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் கருத்து கூறுகின்றனர்.

தவிர, சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுகள் நடக்கவில்லை.

ஊடுருவல் பிரச்னையை விட, இதற்கு தான் பா.ஜ., தற்போது அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்ற குரல்களும், கூட்டணிக்குள்ளேயே ஒலிக்க துவங்கி இருக்கிறது. இதற்கு பா.ஜ., செவி சாய்க்குமா? தேர்தல் வியூகத்தை வேறு விதமாக திசை மாற்றுமா? என்பது வரும் மாதங்களில் தெரிந்துவிடும்.

- நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us