ஜன. 22ல் மாநிலத்தில் உஷார் நிலை போலீசாருக்கு பரமேஸ்வர் அறிவுரை
ஜன. 22ல் மாநிலத்தில் உஷார் நிலை போலீசாருக்கு பரமேஸ்வர் அறிவுரை
ADDED : ஜன 21, 2024 12:22 AM

பெங்களூரு : ''நாளை அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாநிலத்தில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அயோத்தியில் 22ம் தேதி (நாளை) ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதால், மாநிலம் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அன்றைய தினம் கோவில்களில் பூஜைகள், வழிபாடு செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால், சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஹனகல்லில் பெண் கூட்டு பலாத்கார வழக்கை கண்டித்து, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை. வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கைது செய்து உள்ளோம்.
பிரதமர் மோடி பெங்களூரு வருகை தந்ததை வரவேற்கிறோம். ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகை, நமது மாநிலத்துக்கு வரவில்லை. வறட்சி நிவாரணம், சிறப்பு மானியம் வழங்கப்படவில்லை.
வறட்சியால் 36,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. 17,000 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கேட்டுள்ளோம். ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதில் கர்நாடகா முன்னணியில் உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.

