கரியான், ஜலால்பூர் ஜெட்டானுக்கு குறி; பாக்., மீது ட்ரோன் தாக்குதல் நடத்தும் இந்தியா
கரியான், ஜலால்பூர் ஜெட்டானுக்கு குறி; பாக்., மீது ட்ரோன் தாக்குதல் நடத்தும் இந்தியா
ADDED : மே 10, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திவரும் ட்ரோன் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி அளித்து வருகிறது. பாகிஸ்தானின் கரியான் நகரை குறி வைத்து, இந்தியா ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. வேளாண் மற்றும் உணவு முக்கியத்துவம் வாய்ந்த கரியான் மீது பல ட்ரோன்களை கொண்டு இந்தியா தாக்கி வருகிறது.
தொடர்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலால்பூர் ஜெட்டானை குறி வைத்தும், இந்தியா, ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.