sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ10,000 அபராதம்; சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

/

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ10,000 அபராதம்; சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ10,000 அபராதம்; சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ10,000 அபராதம்; சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்


UPDATED : ஏப் 11, 2017 08:35 AM

ADDED : ஏப் 11, 2017 05:42 AM

Google News

UPDATED : ஏப் 11, 2017 08:35 AM ADDED : ஏப் 11, 2017 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: புதிய சட்டத்திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

சட்டத்திருத்த மசோதா:


சாலை பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மோட்டார் வாகனச் சட்டம் 1988, சில திருத்தங்களுடன், சட்டத்திருத்த மசோதாவாக நேற்று(ஏப்.,10) லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

அபராதம்:


புதிய சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறினால் ரூ.500-ம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000-மும், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2,000-மும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000மும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000மும் அபராதமாக விதிக்கப்படும்.

இழப்பீடு:


விபத்து தொடர்பான காப்பீட்டுத் தொகைகள் திருத்தப்பட்டு, விபத்தில் பலியானோருக்கு ரூ.பத்து லட்சம் வரை இழப்பீடும், விபத்தில் காயமடைவோருக்கு ரூ.ஐந்து லட்சம் வரை இழப்பீடும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கட்டாயம்:


சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சமாக டிரைவிங் லைசன்ஸ், வாகனப் பதிவு என எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயப்படுத்தப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us