ம.ஜ.த. சின்னம், லெட்டர் ஹெட் பயன்படுத்த இப்ராகிமுக்கு தடை
ம.ஜ.த. சின்னம், லெட்டர் ஹெட் பயன்படுத்த இப்ராகிமுக்கு தடை
ADDED : ஜன 21, 2024 01:15 AM

பெங்களூரு: ம.ஜ.த., முன்னாள் மாநிலத் தலைவர் இப்ராகிம், கட்சி சின்னம், லெட்டர் ஹெட் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில், சமீபத்தில் ம.ஜ.த., இணைந்தது. இதை ஏற்க மறுத்து கட்சியின் அப்போதைய மாநில தலைவர் இப்ராகிம் அதிருப்தி வெளிப்படுத்தினார்.
இதனால், அவரது பதவி பறிக்கப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், தனியாக பொதுக்குழுவை கூட்டினார். புதிய தலைவர், பொதுச் செயலரை நியமித்தார்.
இதை எதிர்த்து, ம.ஜ.த., தரப்பில் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நேற்று விசாரணை வந்தது. அப்போது, கட்சி சின்னம், லெட்டர் ஹெட் பயன்படுத்த தடை விதித்த நீதிமன்றம், நிர்வாகிகளை நியமிக்க கூடாது என்று இப்ராகிமுக்கு உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை, பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

