ADDED : பிப் 02, 2024 01:06 AM

மூணாறு:கேரளா இடுக்கி அருகே தோப்புராம்குடியில் ஐந்து மாத ஆண் குழந்தையை கொலை செய்த தாயார் டினுலூயிஸ் 35, தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் ஜஸ்டின் மூன்று மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதால் இவர் தாயார் அச்சம்மாவுடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு தாயார் வீட்டின் வெளியில் உள்ள கழிவறைக்குச் சென்றபோது டினுலூயிஸ் கதவை உள்புறமாக தாழிட்டுக் கொண்டார். கதவை தட்டியும் திறக்காததால் பலமாக கூச்சலிட்டதால் அருகில் வசிப்பவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டிற்குள் படுக்கை அறையில் டினுலூயிஸ் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தை தொட்டிலிலும் பிணமாக கிடந்தனர்.
கணவர் இறந்த பிறகு மன உளைச்சலுக்கு ஆளானவர் குழந்தையை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இடுக்கி டி. எஸ்.பி. சாஜூவர்க்கீஸ் தலைமையில் விசாரணை நடக்கிறது.

