
சமரசம் செய்ய முடியாது!
பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சி உறுப்பினர் களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பது, சபாநாயகரின் விருப்பமில்லை. ஆனால், சபையின் கண்ணியத்தில் சமரசம் செய்ய முடியாது. நாங்கள் சபையின் கண்ணியத்தை காப்பாற்ற முயற்சிக்கிறோம்.
ஓம் பிர்லா
லோக்சபா சபாநாயகர்
பதவியை ராஜினாமா செய்வேன்!
மணிப்பூரில், போதைப் பொருள் மற்றும் சட்ட விரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக, பா.ஜ., அரசு எடுத்த நடவடிக்கைகள் அரசியல் அமைப்புக்கு எதிரானது என நிரூபிக்கப்பட்டால், முதல்வர் பதவியில் இருந்து விலகுவேன்.
பைரேன் சிங் மணிப்பூர் முதல்வர், பா.ஜ.,
அழைப்பிதழ் தேவையில்லை!
நம் வாழ்க்கை, கடவுள் ராமரின் பெயரில் துவங்குகிறது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்ல அழைப்பிதழ் தேவையில்லை. கும்பாபிஷேக விழாவுக்கு பின், நான் ராமர் கோவிலுக்கு செல்வேன்.
சுக்விந்தர் சிங் சுகு
ஹிமாச்சல் முதல்வர், காங்.,

