
சம்மன் அனுப்புவது ஏன்?
மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறப்படும் வழக்கில், என் மீது குற்றச்சாட்டுகள் இல்லாத போது, ஏன் அமலாக்கத் துறை தொடர்ந்து எனக்கு சம்மன் அனுப்புகிறது என தெரியவில்லை. என்னை சிறையில் தள்ள பா.ஜ., தலைவர்கள் துடிக்கின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவால்
புதுடில்லி முதல்வர்,
ஆம் ஆத்மி
அக்கறை இல்லாத அமைச்சர்!
பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாகி, ஆயிரக்கணக்கான பயணியர் தினமும் அவதிப்படுகின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அக்கறை காட்டவில்லை.
சசி தரூர்
லோக்சபா எம்.பி., -- காங்.,
தர்மத்தின் அர்த்தம் தெரியுமா?
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் தர்மத்தை தவறாக பயன்படுத்துவதாக காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார். தர்மத்தின் அர்த்தம் தெரியாதவர் அதை பற்றி பேசலாமா?
விஜய் சங்கர் திவாரி
இணை செயலர்,
விஸ்வ ஹிந்து பரிஷத்

