sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அயோத்தி கும்பாபிேஷகத்தன்று... விடுமுறை! மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு

/

அயோத்தி கும்பாபிேஷகத்தன்று... விடுமுறை! மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு

அயோத்தி கும்பாபிேஷகத்தன்று... விடுமுறை! மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு

அயோத்தி கும்பாபிேஷகத்தன்று... விடுமுறை! மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு


ADDED : ஜன 19, 2024 01:05 AM

Google News

ADDED : ஜன 19, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமர் கோவில் கும்பாபிேஷக விழா நடைபெறுவதை முன்னிட்டு, மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் பொது விடுமுறை அறிவித்துள்ளன.

வரும் 22ல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடக்கஉள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலரும், பங்கேற்கவுள்ளனர்.

பிரதமரின் அறிவுறுத்தலின்படி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் பலரும், அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கும்பாபிேஷகத்தன்று சமுதாய கூடங்கள் மற்றும் அனைவரது வீடுகளிலும் தீபங்களை ஏற்றி வைக்கும்படி பிரதமர் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன.

கொண்டாட்டம்


இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை ஒட்டி, மத்திய அரசு அலுவலங்கள் மற்றும் அமைப்புகளுக்கு அரை நாள் விடுமுறையை மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசின் பணியாளர் நலத்துறை துணைச் செயலர் பர்வீன் ஜர்கர், அனைத்து அமைச்சகங்கள், மத்திய அரசுத்துறைகள், மாநில தலைமைச் செயலர்கள், யு.பி.எஸ்.சி., லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயலகங்கள் என அனைத்து மத்திய அரசு அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:

அயோத்தியில் வரும் 22ல் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிேஷகம் நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்படஉள்ளது.

இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்க வேண்டுமென்ற உணர்வு, மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் அதிக அளவில் காணப்படுகிறது.

இதை பூர்த்தி செய்வதற்காக, அன்றைய தினம் பிற்பகல் 2:30 மணி வரையில் நாடு முழுதும் உள்ள மத்திய அரசு அலுவலங்கள், மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகள், மத்திய அரசுக்கு சொந்தமான தொழில்துறை நிறுவனங்கள் அனைத்துக்கும் அரை நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மாநிலங்களிலும் விடுமுறை: உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கோவா, ஹரியானா, சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் கும்பாபிேஷகத்தன்று அரசு அலு வலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை


இதற்கிடையில், கும்பாபிேஷகத்தன்று இணைய வழி மிரட்டல்களோ, குற்றச் செயல்களோ நடக்கலாம் என்பதற்காக, உள்துறை அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

சைபர் வழி தாக்குதல்களை கண்காணித்து, உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை, உள்துறை அமைச்சகம் டில்லியிலிருந்து அயோத்திக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளது.

தினமலர் நாளிதழுக்கு வாய்ப்பு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், வரும் 22ல் ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடக்கவுள்ளது. இதையொட்டி செய்தி சேகரிப்பதற்காக விழாக்குழுவினர் சார்பில் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.டில்லியிலிருந்து பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்வதற்கு பி.ஐ.பி., நிறுவனம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பி.ஐ.பி., அங்கீகார அடையாள அட்டைகள் வைத்துள்ள பத்திரிகையாளர்கள், புகைப்படக்கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதில் தமிழகத்திலிருந்து, தினமலர் நாளிதழ் தேர்வு செய்யப்பட்டு, ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சிகள் குறித்து செய்தி சேகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.



-- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us