ADDED : ஜன 23, 2024 12:19 AM

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, புதுடில்லியில் உள்ள தன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபட்டார். இதுதொடர்பாக தன் சமூக வலைதள பக்கத்தில், 'ராம் ஜோதி' என குறிப்பிட்டு தன் இல்லத்தில் தீபம் ஏற்றிய புகைப்படங்களை பதிவிட்டார்.
இதற்கிடையே, அயோத்தி ராமர் கோவில் விழா நிறைவடைந்த பின், நாடு முழுதும் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் எனப்படும் சூரிய ஒளி மின் சக்தி பெரும் வகையில், சோலார் மின் தகடுகள் பொருத்தும் திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சூரிய வம்சத்தைச் சேர்ந்த பகவான் ராமரின் அருளால், உலகம் முழுதும் ஒளி பெருகுவது போல், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் சூரிய மின் தகடுகள் பொருத்தும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக எரிசக்தி துறையில் நம் நாடு தன்னெழுச்சி பெறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

