ADDED : ஜன 23, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: “எங்கள் அரசின் வாக்குறுதி திட்டங்களால், ராம ராஜ்யத்தின் கனவு நனவானது,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று அவர் கூறியிருப்பதாவது:
ராம ராஜ்யத்தை உருவாக்குவது, எங்களின் கனவு. இதை நனவாக்கும் நோக்கில் எங்கள் அரசு, வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தியது. ஐந்து திட்டங்களும் தற்போது வெற்றியடைந்துள்ளன. எங்கள் அரசின் திட்டங்களால், ராம ராஜ்ய கனவு நனவானது.
ராமனின் வழி காட்டுதல், ஹனுமனின் அர்ப்பணிப்பு இருந்தால், அதுவே அர்த்தமுடைய வாழ்க்கையாக இருக்கும். அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடப்பதற்கு, என் வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

