ADDED : ஜன 19, 2024 12:42 AM
பட்கல் : உத்தரகன்னடாவின், பிரசித்தி பெற்ற முருடேஸ்வரா அரபிக்கடலில் அபூர்வமான திமிங்கலங்கள் தென்பட்டதால், சுற்றுலா பயணியர் குஷியடைந்தனர்.
உத்தரகன்னடா, பட்கலின், முருடேஸ்வரா பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் மற்றும் திருத்தலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், பக்தர்கள் வருகை தருகின்றனர். நேற்று காலை, முருடேஸ்வரா கடற்கரையில் சுற்றுலா பயணியர் குவிந்திருந்தனர்.
முருடேஸ்வராவின், நேத்ரானி தீவு அருகில் ஸ்கூபா டைவிங் சென்ற போது, அபூர்வமான திமிங்கலங்கள் தென்பட்டன. இவற்றை கண்டு சுற்றுலா பயணியர் குஷியடைந்தனர். ஓசைனஸ் ஓர்கா இனத்தை சேர்ந்த திமிங்கலங்கள், நீண்ட பற்களை கொண்டுள்ளன. இவற்றை, 'கில்லர் வேய்ல்' என்றும் அழைப்பர். இவைகள் மனிதர்களுக்கு எந்த தொந்தரவும் தருவதில்லை.
பொதுவாக ஐந்து முதல் 8 அடி நீளம் வளரும் இந்த திமிங்கலங்கள், 90 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியவை என, வல்லுனர்கள் கூறுகின்றனர். கடலில் டால்பின் மீன்கள் தென்படுவது சகஜம். திமிங்கலங்கள் கண்களில் தென்படுவது அபூர்வம்.

