சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு; 5 நாட்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு; 5 நாட்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு
ADDED : மே 14, 2025 07:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்; சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (மே 14) திறக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைகள் தொடங்குகிறது. அதற்காக இன்று மாலை 5 மணியளவில் கோவில் திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறப்பார். முதல் நாள் என்பதால் இன்றைய தினம் சிறப்பு பூஜைகள் இல்லை.
நாளை முதல் கணபதி ஹோமம், உஷ பூஜை உள்ளிட்டவை நடக்கும். மே 19ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். நாள்தோறும் இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் பாடிய பின் நடை அடைக்கப்படும்.

