ADDED : பிப் 12, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: ''துணை முதல்வர் சிவகுமார், மீண்டும் திஹார் சிறைக்கு செல்வார்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆரூடம் கணித்தார்.
மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:
துணை முதல்வர் சிவகுமார், எம்.பி., சுரேஷ் இருவருமே குண்டர்கள் என்பது, மக்களுக்கு தெரியும். என் பேச்சுக்கு சிவகுமார் சினிமா பாணியில் பதில் அளித்துள்ளார். அவரது வாழ்க்கையின் பாதி நாட்கள், திஹார் சிறையில் என்பது முடிவாகி உள்ளது.
பாதியில் அவருக்கு ஜாமின் கிடைத்தது. மீண்டும் அவர் சிறைக்கு செல்வார். பொறுத்திருந்து பாருங்கள். இத்தகையோர் நிறைய பேரை, நான் பார்த்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

