கர்நாடகா சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா. பெங்களூரில் உள்ள இவரது வீட்டில், பொது விநியோக துறை அமைச்சர் முனியப்பா உள்ளிட்ட சில தலித் அமைச்சர்கள் நேற்று திடீரென ஆலோசனை நடத்தினர்.
இடஒதுக்கீடு தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைப்பது தொடர்பாக, ஆலோசனை நடத்தப்பட்டது என்று கூறப்பட்டாலும், தலித் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி இருப்பது, காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
_______________
கர்நாடகாவில் கடந்த மாதம் 43,863 கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் 3,340 பயணியர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 5.39 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. பயணியரிடம் ஜேப்படி செய்த 3,274 பேரிடம் இருந்து 77,577 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
_______________
பெங்களூரு ஹெப்பால், ஹலசூரு, இந்திராநகரில் உள்ள, சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாக, வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதையடுத்து மூன்று அலுவலங்களிலும் நேற்று ஒரே நேரத்தில், வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

