ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலை மூன்று வாரங்களுக்கு பின் திறப்பு
ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலை மூன்று வாரங்களுக்கு பின் திறப்பு
ADDED : செப் 18, 2025 12:28 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் கனமழை, வெள்ளப்பெருக்கால் ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் மூன்று வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகன போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கியது.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த மாதம் கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பலத்த சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து, 270 கி.மீ., நீளமுள்ள இந்த சாலை மூடப்பட்டது. இதனால் ஆப்பிள் உட்பட பழங்களை ஏற்றிச் சென்ற, 4,000க்கும் மேற்பட்ட லாரிகள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
சாலைகள் சீரமைக்கப்பட்டதை அடுத்து, கடந்த வாரம் ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. ஆனால் இலகு ரக வாகனங்கள் மட்டும் அந்த சாலையில் அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இது குறித்து ஊரக போக்குவரத்து போலீஸ் எஸ்.பி., ரவீந்திர சிங் கூறியதாவது:
பழங்கள் ஏற்ற ப் பட்டு நிற் கும் அதிகப்படியான லாரிகளை வெளியேற்றுவதே எங்கள் நோக்கம்.
இதன்படி நெடுஞ்சாலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் பழ மண்டிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் முன்னுரிமை அடிப்படையில் அனுப்பப்படும்.
எனவே டிரைவர் கள் நெடுஞ்சாலையில் போக்கு வரத்து விதிமுறைகளை பின்பற்றி செல்வதுடன், மற்ற வாகனங்களை முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும். சாலை விதிகளை மீறினால், விபத்து ஏற்படுவதுடன், சாலையில் தடையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

