ADDED : ஜன 19, 2024 12:34 AM

மைசூரு தாலுகா சோமநாதபுரா கிராமத்தில் உள்ளது கேசவா கோவில். இந்த கோவில் ஹொய்சாளா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஹொய்சாளா மூன்றாம் மன்னர் நரசிம்மனிடம், ராணுவ தளபதியாக இருந்த சோமநாதர் என்பவர், இந்த கோவிலை கட்டியுள்ளார்.
கி.பி., 1268ல் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் பிரமாண்ட முறையில் செய்யப்பட்டு உள்ளது. கோவில் கட்டிய பின்னர், அந்த இடத்திற்கு சோமநாதா என்று பெயர் வைத்து உள்ளார். காலப்போக்கில் அந்த பெயர் மருவி, சோமநாதபுராவாக மாறியது.
இந்த கோவிலில் ஜனார்த்தனா, கேசவா, வேணுகோபால் ஆகிய, மூன்று வடிவங்களில் தோன்றும் கடவுள் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
மன்னர் காலத்தில் யானைகளின் அணிவகுப்பு, குதிரைப்படையை சித்தரிக்கும் போர்க்காட்சிகள், கோவில் சுவற்றின் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டு உள்ளன.
கோவிலின் கட்டடகலை, பக்தர்களை மனதை வசீகரிக்கும் வகையில் உள்ளது.
இங்கு வரும் பக்தர்கள் ஹொய்சாளா மன்னர்களின் கட்டட கலையை பார்த்து, பிரமித்து போகின்றனர்.
கோவிலை சுற்றி வந்து, மொபைல் போன்களில் புகைப்படமும் எடுத்து கொள்கின்றனர். காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, கோவில் நடை திறந்திருக்கும்.
பெங்களூரில் இருந்து 135 கிலோ மீட்டர் துாரத்தில், இந்த கோவில் உள்ளது. காரில் சென்றால், 2:30 மணி நேரத்தில் சென்று விடலாம். பஸ் வசதியும் உள்ளது.
- நமது நிருபர் -

