ADDED : ஜூன் 14, 2025 06:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லி முஸ்தபாபாதில், துப்பாக்கியால் சுட்ட இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
முஸ்தபாபாதில் கடை வைத்திருக்கும் ஷாகிர், 27, என்பவருக்கும், சிலருக்கும் முன் விரோதம் இருந்தது. தன் கடை மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக, போலீசில் புகார் செய்தார்.
கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து அனஸ், 21, ஜீஷா, 21, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
ஷாகிர் கடை மீது துப்பாக்கியால் சுட்டதை ஒப்புக் கொண்டனர். சமூக வலைதள பதிவு தொடர்பாக இரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்தது.