ரயில் மோதி 3 ஊழியர்கள் பலி சிக்னல் சரி செய்தபோது விபரீதம்
ரயில் மோதி 3 ஊழியர்கள் பலி சிக்னல் சரி செய்தபோது விபரீதம்
ADDED : ஜன 24, 2024 01:12 AM
மும்பை, மஹாராஷ்டிராவின் மும்பை அருகே புறநகர் ரயில் மோதிய விபத்தில் மூன்று ரயில்வே ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்துஏற்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் ரோடு மற்றும் நாய்காவ் ரயில் நிலையங்கள் இடையே அமைந்துள்ள ரயில்வே சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.
இதை சரி செய்யும் பணியில் நேற்று முன்தினம் இரவில் ரயில்வே ஊழியர்கள் மூவர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மும்பை சர்ச்கேட் நோக்கி சென்ற புறநகர் ரயில், அவர்கள் மீது மோதியது.
இதில், தலைமை சிக்னல் ஆய்வாளர் வசு மித்ரா, வசாய் ரோடு எலக்ட்ரிக்கல் சிக்னல் பராமரிப்பாளர் சோம்நாத் உத்தம் லம்புத்ரே மற்றும் உதவியாளர் சச்சின் வான்கடே ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக மேற்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
உயிரிழந்த மூவரது குடும்பத்துக்கும் தலா 55,000 ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

