ADDED : ஜன 19, 2024 12:43 AM

பெங்களூரு : ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த, மஹாராஷ்டிராவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த, மஹாராஷ்டிராவின் ராகுல் சதீஷ் மானே, 30, மல்லிக், 28, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இரண்டு கை துப்பாக்கிகள், ஒன்பது தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் இருவரும், முன்பு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அப்போது பல ரவுடிகளின் பழக்கம், இவர்களுக்கு கிடைத்து இருந்தது.
சிறையில் இருந்து ஜாமினில் வந்ததும், மஹாராஷ்டிராவில் இருந்து குறைந்த விலைக்கு, துப்பாக்கி வாங்கி வந்து, பெங்களூரு ரவுடிகளுக்கு அதிக விலைக்கு விற்றது தெரிந்தது. இவர்கள் யார், யாருக்கு துப்பாக்கி விற்பனை செய்தனர் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

