ADDED : ஜன 24, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துமகூரு : கல்குவாரியில் பாறை விழுந்து, இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
துமகூரின், கவுதமாரனஹள்ளி கிராமத்தில், கர்நாடக ஜல்லி கிரஷர் என்ற கல்குவாரி செயல்படுகிறது.
நேற்று மதியம் 1:00 மணியளவில் பணியில் ஈடுபட்டிருந்தனர். வெடிவைத்து பாறை தகர்க்கும் பணி நடந்தது.
அப்போது பாறை மேல் நின்றிருந்த தொழிலாளர்கள் மீது, மற்றொரு பாறை விழுந்தது. இதில் முகமது அபூல், 29, மனு, 25, ஆகிய இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த ஈரா என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்த முகமது அபூல், பீஹாரை சேர்ந்தவர். மனு, சத்தீஸ்கரை சேர்ந்தவர். சம்பவம் நடந்த பின், கல்குவாரி உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.
கியாத்சந்திரா போலீசார் விசாரிக்கின்றனர்.

