sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எமர்ஜென்சிக்கு எதிராக போராடியவர்களின் தியாகங்களுக்கு கவுரவம்: மத்திய அமைச்சரவை முடிவு

/

எமர்ஜென்சிக்கு எதிராக போராடியவர்களின் தியாகங்களுக்கு கவுரவம்: மத்திய அமைச்சரவை முடிவு

எமர்ஜென்சிக்கு எதிராக போராடியவர்களின் தியாகங்களுக்கு கவுரவம்: மத்திய அமைச்சரவை முடிவு

எமர்ஜென்சிக்கு எதிராக போராடியவர்களின் தியாகங்களுக்கு கவுரவம்: மத்திய அமைச்சரவை முடிவு

13


UPDATED : ஜூன் 25, 2025 09:54 PM

ADDED : ஜூன் 25, 2025 04:56 PM

Google News

13

UPDATED : ஜூன் 25, 2025 09:54 PM ADDED : ஜூன் 25, 2025 04:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதற்கு, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கு எதிராக போராடியவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எமர்ஜென்சியை எதிர்த்தும், இந்திய அரசியல்சாசனத்தை தாக்கும் முயற்சியை துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற தனிநபர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கவுரவிக்க தீர்மானிக்கப்பட்டது. அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு , பின்னர் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கொடூரங்களுக்கு ஆளானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

எமர்ஜென்சி காலத்தில் நடந்த அத்துமீறலுக்கு எதிரான அவர்களின் துணிச்சலுக்கும், தைரியமான எதிர்ப்புக்கும் மத்திய அமைச்சரவை அஞ்சலி செலுத்தியது. எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது இந்திய வரலாற்றில் ஒரு மறக்க முடியாத அத்தியாயம். அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்டது. இந்தியாவின் குடியரசு மற்றும் ஜனநாயக உணர்வுகள் தாக்கப்பட்டன. அடிப்படை உரிமைகள், தனிமனித சுதந்திரம் நிறுத்தப்பட்டன.

மேலும் இந்த கூட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளின் மீள்தன்மை மீதும் நாட்டு மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். சர்வாதிகாரப் போக்குகளை எதிர்த்து, நமது அரசியலமைப்பையும், அதன் ஜனநாயக கட்டமைப்புகளையும் பாதுகாக்க உறுதியாக நின்றவர்களிடம் இருந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும். ஜனநாயகத்தின் தாயான இந்தியா , அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புகளைப் பாதுகாத்தற்கு உதாரணமாக திகழ்கிறது. ஒரு தேசமாக நமது அரசியலமைப்பையும், அதன் ஜனநாயக கூட்டாட்சி உணர்வையும் நிலைநிறுத்துவற்கான நமது உறுதியை புதுப்பிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us