sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

வசமாகும் வளர்ச்சி!

/

வசமாகும் வளர்ச்சி!

வசமாகும் வளர்ச்சி!

வசமாகும் வளர்ச்சி!


ஆக 17, 2023 12:00 AM

ஆக 17, 2023 12:00 AM

Google News

ஆக 17, 2023 12:00 AM ஆக 17, 2023 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த சில ஆண்டுகளாக, அனைத்து துறை சார்ந்த படிப்புகளிலும் சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளில் அதிகளவிலான மாணவர்கள் வட மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுகின்றனர். 
மகத்துவமான ஆவணம்
மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள ’தேசிய கல்வி கொள்கை-2020’ பல்வேறு தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மிகவும் மகத்துவம் வாய்ந்த ஆவணம். மாணவர்களின் திறன் வளர்ப்பு, சவால்களை தீர்க்கும் திறன் மற்றும் ஆசிரியர்களின் திறன் மேம்பாடு உட்பட பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. வேலை வாய்ப்பு திறன் மிக்கவர்களாக மட்டுமின்றி, தொழில் முனைவோராகவும் ஊக்குவிக்கிறது. தேசிய கல்வி கொள்கையின் படி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களை மேம்படுத்தியும், புதுப்பித்தும் வருகின்றன. 
கொட்டி கிடக்கும் தகவல்கள்
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் இன்றைய கால சூழலில், மாணவர்களால் ஏராளமான தகவல்களை எளிதாக பெற முடிகிறது. தவறான மற்றும் தேவையற்ற தகவல்களை பெறவும் அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், சரியான மற்றும் தேவையான தகவல்களை தேர்வு செய்ய மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டிய பொறுப்பு இன்றைய ஆசிரியர்களுக்கு உண்டு. சரியான தகவல்கள் மாணவர்களை சென்றடைவதை உறுதி செய்யும் போது, வளமான இளம் தலைமுறை உருவாகும். ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் பல்வேறு திறன் வளர்ப்பு படிப்புகளை மேற்கொள்வதன் வாயிலாக, சிறப்பான எதிர்காலத்தை அவர்களால் பெற முடியும். 
தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
மாணவர்களுக்கு சிறந்த இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கவும், வேலை வாய்ப்பை பிரகாசமாக்கவும், ஆசிரியர்களுக்கு புதிய ஆராய்ச்சி வாய்ப்புகளுக்கும், சமூக சவால்களுக்கு தீர்வு காணவும் தொழில்நிறுவனங்களுடன் இணைந்து கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 
தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆராய்ந்து அவற்றிற்கு உரிய தீர்வு காண்பதும் சாத்தியமாகிறது. அதன்படி, இந்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளவும், தேசிய கல்வி கொள்கையின் அம்சங்களையும் நிறைவேற்றவும் முடியும். 
ஒரு சுயசார்பு நாடான நம் நாட்டில் வேலை வாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. அதிகளவிலான மாணவர்கள் உயர்கல்வியை பெறுவதும், திறன் மிக்கவர்களாக வலம் வருவதும், சிறப்பான வாய்ப்புகளை  பெறுவதும், தொழில் முனைவோராக பிரகாசிப்பதும் பரவலாக இன்று சாத்தியமாகி உள்ளது. இன்னும் கணக்கில் அடங்கா வளர்ச்சியை இந்தியா எதிர்நோக்கி உள்ளது.
- பேராசிரியர் சிபராம் காரா, துணைவேந்தர், சார்தா பல்கலைக்கழகம், உத்தர பிரதேசம். 







      Dinamalar
      Follow us